ஆப்நகரம்

இப்படி பண்றாரே: பிரபல நடிகையால் கடுப்பில் ரசிகர்கள்

பிரபல நடிகை செய்து வரும் காரியத்தை பார்த்து திரையுலகினரும், ரசிகர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Dec 2020, 5:29 pm
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் அந்த பிரபல நடிகை. தற்போது அவரின் மார்க்கெட் லைட்டாக அடி வாங்கத் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் நடிகையோ பிற நடிகைகளின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முயற்சி செய்கிறாராம்.
Samayam Tamil gossip


மேலும் நடிகை விடிந்ததில் இருந்து தூங்கப் போகும் வரை சமூக வலைதளங்களே கதி என்று கிடக்கிறார். தான் என்ன செய்தாலும் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். ஆரம்பத்தில் ஆஹோ, ஓஹோ, அழகு என்று பாராட்டிய ரசிகர்கள் கூட தற்போது கடுப்பாகிறார்கள்.

ஏற்கனவே பெயர் வாங்கிய நடிகையாக இருந்தும் அவர் ஏன் இப்படி எல்லாம் விளம்பரம் தேட பேயாக அலைகிறார் என்று திரையுலகினரும் முணுமுணுக்கிறார்கள்.

நடிகை அண்மையில் செய்த ஒரு காரியம் கண்ணழகியை பார்த்து காப்பியடித்தது என்று விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் நடிகையின் வேலை தொடர்பாக பணம் போட்ட தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்களாம்.

காசு மட்டும் கரெக்டா வாங்கத் தெரியுது, வேலையை மட்டும் ஒழுங்காக செய்ய முடியாதா என்று தயாரிப்பாளர்கள் கூறினார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்