ஆப்நகரம்

வில்லியாக மாறிய கவர்ச்சி நடிகை!

ஒரு படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா வில்லியாக நடிக்கிறார்.

TNN 11 Jul 2016, 6:33 pm
ஒரு படத்தில் கவர்ச்சி நடிகை ஷகிலா வில்லியாக நடிக்கிறார்.
Samayam Tamil
வில்லியாக மாறிய கவர்ச்சி நடிகை!


மலையாள சினிமா ரசிகர்களை தனது கவர்ச்சியால் கலக்கி எடுத்தவர் ஷகீலா. அவர் நடித்த படங்கள் ரிலீசாகிறது என்றால் மம்மூட்டி, மோகன்லால் நடித்த படங்களை வெளியிடவே பயந்த காலங்களும் இருந்தது. அந்த அளவுக்கு மலையாள சினிமாவில் முன்னணி வகித்து வந்தார் ஷகீலா.

ஆனால் ஒரு பத்து ஆண்டுகளுக்குப்பிறகு ஷகீலாவின் மலையாள சினிமா மார்க்கெட் சரிந்தது. அதனால் மீண்டும் அவர் தமிழுக்கு வந்தார். கிடைக்கிற கேரக்டர்களில் நடித்து வந்தார். ஆனபோதும் அவர் கவர்ச்சி நடிகை என்பதால் கவர்ச்சி கலந்த கேரக்டர்களை டைரக்டர்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், நீண்டகாலமாக கிளாமர் நடிகையாக வலம் வந்து விட்ட ஷகீலாவுக்கு இப்போது மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளதாம்.

வில்லியாக நடிக்க வேண்டும் என்பது தான் அவரது நீண்ட கால ஆசையாம். அதனால் தன்னை கவர்ச்சி கேரக்டர்களுக்கு புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், வில்லி வேடங்கள் இருந்தாலும் கொடுங்கள். கவர்ச்சி நடிகை ஷகீலாவா இது என்று அதிர்ச்சியடையும் அளவுக்கு ஆக்டு கொடுக்கிறேன் என்று கூறிவந்தார். ஷகீலாவின் இந்த வேண்டுகோளை ஏற்க பலரும் மறுத்து வந்த நிலையில், தற்போது ஒரு டைரக்டர் அவரை வில்லி வேடத்துக்கு புக் பண்ணியிருக்கிறாராம். கிட்டத்தட்ட சொர்ணாக்கா ரேஞ்சுக்கு அந்த வேடத்தில் வரிந்து கட்டி நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஷகீலா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்