ஆப்நகரம்

உங்கள் மாநிலத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்? விஜயசாந்திக்கு பிரபல இயக்குநர் பதிலடி!!!

''விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்று நினைப்பா? உங்கள் மாநிலத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். இது எங்களுடைய வாழ்க்கை'' என்று நடிகை விஜயசாந்திக்கு பிரபல இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் காட்டமான பதில் அளித்துள்ளார்.

TOI Contributor 20 Feb 2017, 4:24 pm
''விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்று நினைப்பா? உங்கள் மாநிலத்துடன் வைத்துக் கொள்ளுங்கள். இது எங்களுடைய வாழ்க்கை'' என்று நடிகை விஜயசாந்திக்கு பிரபல இயக்குநர் ஜேம்ஸ் வசந்தன் காட்டமான பதில் அளித்துள்ளார்.
Samayam Tamil
உங்கள் மாநிலத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்? விஜயசாந்திக்கு பிரபல இயக்குநர் பதிலடி!!!


தமிழகத்தில் சசிகலாவின் பினாமி முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விஜய்சாந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது சமாதிக்கு வந்திருந்த விஜய்சாந்தி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''அதிமுக பிளவுபடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். கட்சியை உடைக்க சதி நடக்கும்'' என்று தெரிவித்து இருந்தார்.
விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை! — James Vasanthan (@Vasanthan_James) February 19, 2017 இந்நிலையில் தற்போது சசிகலாவின் பினாமி முதல்வராக பதவியேற்று இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விஜயசாந்தி வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்து இருக்கும் பிரபல இயக்குநரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன், ''விஜயசாந்திக்கு பெரிய அரசியல் வித்தகர் என்ற நினைப்பா! கருத்துகளை உங்கள் மாநிலத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இது சினிமா அல்ல! எங்கள் வாழ்க்கை!'' என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

This is our life; keep it in your own state: Director to actress Vijay Shanthi

அடுத்த செய்தி

டிரெண்டிங்