ஆப்நகரம்

அஜித்தின் அன்பால் அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி..!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படத்தில் நடிப்பதற்காக அப்புக்குட்டி அமெரிக்கா செல்ல இருக்கிறார்.

TNN 28 Aug 2016, 6:32 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படத்தில் நடிப்பதற்காக அப்புக்குட்டி அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
Samayam Tamil  appukutty will going to usa for ajith 57
அஜித்தின் அன்பால் அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி..!


ஏற்கனவே சிறுத்தை சிவா-அஜித் கூட்டணியில் வெளியான ‘வீரம்’ திரைப்படத்தில் அப்புக்குட்டி நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இதே கூட்டணியில் உருவாகி வரும் இன்னும் பெயரிடப்படாத ’அஜித்-57 ’ திரைப்படத்திலும் அப்புக்குட்டி நடிக்க உள்ளார்.அப்புக்குட்டி தொடர்பான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.இந்நிலையில் திடீரென அப்புக்குட்டி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் அமெரிக்காவில் படமாக்க இயக்குநர் முடிவு செய்துள்ளாராம்.இதனால் விரைவில் அமெரிக்க செல்ல இருக்கிறார் அப்புக்குட்டி.

வீரம் படப்பிடிப்பின் போது தனது நன்மதிப்பை பெற்ற அப்புக்குட்டிக்கு,வித்தியாசமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து அழகு பார்த்தார் அஜித்.இதனை தொடர்ந்து இப்போது அமெரிக்க செல்லும் அதிர்ஷ்டமும் அஜித்தால் அப்புக்குட்டிக்கு சாத்தியமாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்