ஆப்நகரம்

‘போகன்’ டிசம்பரில் வெளியாகிறது!

ஜெயம் ரவி , அரவிந்தசாமி இணைந்த நடித்த ‘போகன்’ டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

TOI Contributor 29 Sep 2016, 4:36 pm
ஜெயம் ரவி , அரவிந்தசாமி இணைந்த நடித்த ‘போகன்’ டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
Samayam Tamil  bhogan will release in december
‘போகன்’ டிசம்பரில் வெளியாகிறது!


இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்து வரும் படம் ‘போகன்’.  இந்தப் படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். ‘போகன்’ பட வெளியாவது குறித்து நடிகர் பிரபுதேவா கூறியதாவது;
‘போகன்’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது. படத்தை நான் பார்த்தேன். இது வெற்றிப்படமாக அமையும். ‘தனி ஒருவன்’ படத்திற்கு பின்னர் ஜெயம் ரவிக்கு இந்த படம் பெரிய வெற்றியைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளார். ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலரும்  சிறப்பாக நடித்துள்ளனர். படம் டிசம்பரில் வெளியாகவுள்ளது’’ என்றார்.
படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரபு தேவா படத்தை தயாரித்துள்ளார். லக்ஷ்மண் படத்தை இயக்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்