ஆப்நகரம்

ஆடியோ நிறுவனத்தை தொடங்கிய தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்!

பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ‘ஸ்டூடியோ 9 மியூசிக்’ என்ற ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

TOI Contributor 27 Dec 2016, 3:18 pm
பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ‘ஸ்டூடியோ 9 மியூசிக்’ என்ற ஆடியோ நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
Samayam Tamil  film producer r k suresh has opened audio shop
ஆடியோ நிறுவனத்தை தொடங்கிய தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்!


தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ், ஸ்டூடியோ 9 சார்பில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘தங்க மீன்கள்’ ஆகிய படங்களை வெளியிட்டுள்ளனர். பின்னர் விஜய்சேதுபதியை வைத்து ‘தர்மதுரை’ படத்தை தயாரித்தது. இந்த நிறுவனத்தை நடத்தி வரும் ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாகவும் நடித்தார். விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகரான ஆர்.கே.சுரேஷ் தனது ‘ஸ்டுடியோ-9 மியூசிக்‘ என்ற நிறுவனம் மூலம் இப்போது ஆடியோ உலகிலும் கால் பதிக்கிறார். இந்த நிறுவனத்தின் முதல்வெளியீடாக புதுமுகங்கள் நடித்த ‘அட்டு’ என்ற படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளது.

ரத்தின லிங்கா இயக்கத்தில் வட சென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக சொல்லும் ‘அட்டு’ படத்தின் ஆடியோ உரிமையை ‘ஸ்டுடியோ-9 மியூசிக் நிறுவனம்‘ பெற்றுள்ளது. இதன் ஆடியோவை மிக விரைவில் வெளியிடவிருக்கிறது . ஆடியோ மார்க்கெட் களையிழந்து காணப்படும் இந்த நேரத்தில் ‘ஸ்டுடியோ-9 மியூசிக்‘ நிறுவனத்தை ஆர்.கே.சுரேஷ் தொடங்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்