ஆப்நகரம்

அஜீத் புகழ்பாடும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள்!

நடிகர் அஜீத்தை உடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

TNN 9 Nov 2016, 7:22 pm
நடிகர் அஜீத்தை உடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Samayam Tamil  junior artists praised ajithkumar for his kindness
அஜீத் புகழ்பாடும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள்!


நடிகர் அஜீத்தைப்பற்றி உடன் நடிக்கும் நடிகைகள்தான் பெருமையாக கூறி வந்தனர். ஆனால் தற்போது அவரது படத்தில் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளும் அஜீத்தைப் பற்றி பெருமையாக பேசி வருகின்றனர்.

அஜீத் பற்றி அவர்கள் கூறுகையில், ‘‘அஜீத்தைப் பொறுத்தவரை பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற வித்தியாசம் காட்டமாட்டார். படப்பிடிப்பு சமயத்தில் அனைவரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பழகுவார். கலகலப்பாகப் பேசுவார். அதோடு, தன்னுடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்களை அந்த காட்சியில் நடிப்பதற்கு முன்பு ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டு தெரிந்து வைத்துக் கொள்வார். பின்னர் 'நல்லா பண்ணுங்க பெஸ்ட் ஆப் லக்' என்று அனைவருக்கும் கைகொடுத்து நடிக்கத் தொடங்குவார். மேலும், ஒருமுறை பெயரைக் கேட்டு தெரிந்து கொள்பவர், அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் அதே பெயரை சொல்லி நம்மை அழைப்பார். ஒரு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர், தன்னுடன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை அழைத்து அன்போடு பேசும் போது மனசுக்கு நெகிழ்ச்சியாக உள்ளது" என்கின்றனர்.

Junior artists praised Ajithkumar for his kindness

அடுத்த செய்தி

டிரெண்டிங்