ஆப்நகரம்

'சிவலிங்கா’ டப்பிங் பணி ஆரம்பம்!

பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’ படத்திற்கான டப்பிங் பணி ஆரம்பமாகியுள்ளது.

TNN 17 Dec 2016, 7:21 pm
பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’ படத்திற்கான டப்பிங் பணி ஆரம்பமாகியுள்ளது.
Samayam Tamil  sivalinga dupping works started
'சிவலிங்கா’ டப்பிங் பணி ஆரம்பம்!


பி.வாசு கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து இயக்கிய படம் ‘சிவலிங்கா’. அவருடன் வேதிகா, ஊர்வசி உள்பட பலர் நடித்த அந்த படம் சிலமாதங்களுக்கு முன்னர் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தை தற்போது தமிழில் ராகவா லாரன்சை நாயகனாக வைத்து ரீமேக் செய்திருக்கிறார் பி.வாசு. இதில் நாயகியாக ரித்திகா சிங் நடித்துள்ளார் , நடிகர் வடிவேலுவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ‘சந்திரமுகி’ பாணியில் ஒரு திகில் ஹாரர் கதையில்தான் உருவாகியிருக்கிறது. அதோடு, ஜோதிகா நடித்தது போன்ற ஒரு லீடு ரோலில் இதில் ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்து விட்ட நிலையில், சென்னையில் டப்பிங் பணிகளை தொடங்கி விட்டார் பி.வாசு. படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தற்போது லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட முக்கிய கலைஞர்கள் டப்பிங் பேசி வருகின்றனர்.

Sivalinga dupping works started

அடுத்த செய்தி

டிரெண்டிங்