ஆப்நகரம்

இசையமைப்பாளருக்கு விரைவில் திருமணம்!

இசையமைப்பாளர் அம்ரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது

TOI Contributor 7 Oct 2016, 3:26 pm
இசையமைப்பாளர் அம்ரேஷ் முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகன். அம்ரேஷுக்கும் கீர்த்திக்கும் இம்மாதம் 19ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷுக்கும், சென்னையை சேர்ந்த சுதர்சன்- விஜயஸ்ரீ தம்பதிகளின் மகள் கீர்த்திக்கும் ஏற்கெனவே திருமணம் நிச்சயப்பட்டிருந்தது. ஆகையால் அம்ரேஷ் -கீர்த்தி திருமணம், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில், வருகிற 19ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி அதே மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
Samayam Tamil  tamil music director amresh will marry soon
இசையமைப்பாளருக்கு விரைவில் திருமணம்!


அம்ரேஷ் அம்மா ஜெயசித்ரா இயக்கிய ‘நானே என்னுள் இல்லை’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர். மேலும் அந்தப் படத்திற்கு இசையையும் அமைத்தவர். தற்போது அம்ரேஷ் ‘மொட்ட சிவா கெட்ட சிவா,’ ‘பொட்டு,’ ‘சத்ரு’ உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்