ஆப்நகரம்

"வேலைக்காரன்" -பர்ஸ்ட் லுக் வெளியீடு..!

சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

TNN 5 Jun 2017, 8:50 pm
சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
Samayam Tamil  velaikkaran first look
"வேலைக்காரன்" -பர்ஸ்ட் லுக் வெளியீடு..!


ரெமோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் “வேலைக்காரன்” திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் நடித்து வருகிறார். ‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கும் படம் என்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த படத்தை ரெமோ படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

#Velaikkaran is here 🤘 pic.twitter.com/Yu9HcNvMuo — Anirudh Ravichander (@anirudhofficial) June 5, 2017 இன்று வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து #velaikkaran என்ற ஹேஷ் டாக், டிவிட்டரில் சில நிமிடங்களில் டிரெண்டானது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாக பரவி வருகிறது.

velaikkaran-first look

அடுத்த செய்தி

டிரெண்டிங்