ஆப்நகரம்

த்ரிஷாவின் கனவை ரஜினி நிறைவேற்றுவாரா?

நடிகை த்ரிஷா ரஜினியுடன் நடிக்கவேண்டும் என்ற 10 வருட கனவை தற்போது ரஜினி நிறைவேற்றி வைப்பாரா என்று தெரியவில்லை.

TOI Contributor 14 Nov 2016, 3:28 pm
நடிகை த்ரிஷா ரஜினியுடன் நடிக்கவேண்டும் என்ற 10 வருட கனவை தற்போது ரஜினி நிறைவேற்றி வைப்பாரா என்று தெரியவில்லை.
Samayam Tamil  will trisha get the chance to act in kabali 2
த்ரிஷாவின் கனவை ரஜினி நிறைவேற்றுவாரா?


நடிகை த்ரிஷா சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் ரஜினியுடன் நடிக்கவில்லை. குறுகிய காலத்தில் வந்த நயன்தாரா, அனுஷ்கா, ஸ்ரேயா, ராதிகா ஆப்தே போன்ற நடிகைகளுக்கு அந்த சான்ஸ் கிடைத்து விட்டது. எனக்கு மட்டும் ஏன் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பலமுறை தன்னைத்தானே கேட்டிருக்கிறார் த்ரிஷா.

ரஜினி நடித்த ‘கபாலி‘ படத்தில் தனக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்தார் த்ரிஷா. ஆனால், அந்த அதிர்ஷ்டம் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு கிடைத்தது. அவர் அந்த படத்தின் நாயகியாகி விட்டார்.

தனுஷுக்கு ‘கொடி’ படத்தில் நாயகியாக நடித்துள்ள த்ரிஷா, அடுத்ததாக ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்தை தனுஷ் தயாரிப்பதால் அவர் மூலமாக அந்த படத்தில் வாய்ப்பு தேட முயற்சித்துள்ளார் த்ரிஷா. ஒருவேளை ரஜினியுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஏதாவது முக்கிய கேரக்டர் ரோலில் நடித்தால் போதும் என்ற முடிவில் இருக்கிறாராம் த்ரிஷா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்