ஆப்நகரம்

அஜித் பற்றி இந்த 10 விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை

தல அஜித் கடைபிடிக்கும் சில வித்யாசமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா. முழு விவரம் உள்ளே.

Samayam Tamil 4 Aug 2020, 2:25 pm
கோலிவுட்டில் அதிக அளவு ரசிகர்களை கொண்டு உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் தல அஜித். அவர் சினிமா துறைக்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்களும் கூட அஜித் பற்றி பதிவிட்டு வருகின்றனர். பிரசன்னா, பிரேம்ஜி, மஹத், பூனம் பாஜ்வா, நிக்கி கல்ராணி, பார்வதி நாயர், நந்திதா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் அஜித் பற்றி பதிவிட்டு இருந்தனர். அவர்களில் பலரும் அஜித் சினிமா பின்னணி இல்லாமல் தற்போது வளர்ந்தது பற்றி தான் பேசி இருக்கின்றனர்.
Samayam Tamil Ajith


இந்நிலையில் தற்போது தல அஜித் பற்றி உங்களுக்கு இதுவரை தெரிந்திருக்காத சில விஷயங்கள் பற்றி பார்ப்போம்..

பெற்றோரிடம் ஆசீர்வாதம்:

தல அஜித் எப்போதும் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் செல்லும் முன்பும் அவரது பெற்றோரிடம் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு தான் செல்வார்.

ஒரு படம் நடிக்கும் போது வேறு கதை கேட்பதில்லை:

ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அஜித் அதில் மட்டுமே கவனம் செலுத்துவார். அடுத்த படத்திற்காக கதை கேட்பதை அவர் முற்றிலும் தவிர்த்து விடுவார். ஒரு படத்தை முழுமையாக முடித்த பிறகு தான் அடுத்த படத்தின் பணிகளை அவர் துவங்குவார்.

பெரியவர்களுக்கு மரியாதை:

அஜித் எப்போதும் பெரியவர்களுக்கு மரியாதை அளிப்பவர். ஒரு சீனில் தன்னை விட வயது மூத்த நடிகர் ஒருவருடன் நடித்தால், முதலில் கட்சியை அவர்களிடம் கூறுங்கள் என இயக்குனரிடம் சொல்வாராம் அஜித். அவரது வயதுக்கும் அனுபவத்திற்கும் மரியாதை அளிக்கும் விதத்தில் இப்படி செய்வாராம் அஜித்.

இடது கை பழக்கம்:

அஜித் எப்போதும் எது குடிப்பதாக இருந்தாலும் தன்னுடைய இடது கையில் தான் குடிப்பாராம். எந்த விதமான பாக்டீரியா தொற்றும் வராமல் இருக்க அவர் இப்படி செய்கிறாராம்.

ஒரே போன் நம்பர்..

அஜித் ஒரு படத்தில் புதிய டீம் உடன் நடிக்க ஒப்புக்கொண்டால், அந்த படம் முடியும் வரை அதே போன் நம்பரை தான் வைத்திருப்பாராம். அந்த படம் முடிந்த பிறகு அந்த நம்பரை மாற்றிவிடுவாராம்.

ரசிகர்கள்..

அஜித் எப்போதும் தன்னுடைய ரசிகர்கள் வேறு நடிகர்கள் பற்றி ட்ரோல் செய்வது, மோசமாக பேசுவதை விரும்புவதில்லை. நெகட்டிவாக யாரவது பேசினால் அவர்களை அலுவலகத்தில் இருந்து நீக்கி விடுவாராம்.

தயாரிப்பாளருடன் சந்திப்பு:

யாராவது தயாரிப்பாளருடன் சந்திப்பது என்றால் அஜித் தான் அவர்கள் இடத்திற்கு சென்று சந்திப்பாராம்.

ரிலீஸ் நாள்..

தன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் நாளில் FDFS பற்றிய முடிவுகளை அவர் கேட்க மாட்டாராம். போனிடம் இருந்து விலகி தான் இருப்பார் அவர்.

குடும்பம்..

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் நேரத்தை செலவழிக்க அவர் தவறுவதில்லை.

நகம்..

அஜித்திற்கு எப்போதும் நகம் நீளமாக இருந்தால் பிடிக்காதாம். அவருடன் ஒரு போட்டோ அல்லது செல்பி எடுக்க போகிறீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் நகம் அதிகம் நீளமாக இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் அப்படி இருந்தால் அஜித்துக்கு பிடிக்காது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்