ஆப்நகரம்

கொரோனா விழிப்புணர்வுக்கு திருவிளையாடல் வீடியோ: இணையத்தில் வைரல்

55 வருடங்கள் முன்பு வெளிவந்த திருவிளையாடல் படத்தின் வீடியோ தற்போது கொரோனா விழிப்புணர்வுக்காக இணையத்தில் வைரலாகி வருகிறது.

etimes.in 20 Mar 2020, 5:35 pm
"கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?" என ஆரம்பித்து திருவிளையாடல் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி மிகவும் பிரபலம். 1965ல் வெளிவந்த இந்த படம் தற்போதும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
Samayam Tamil Sivaji Ganesan and Nagesh in Thiruvilaiyadal movie


இந்த வீடியோ தற்போது வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அந்த வீடியோவில் வரும் வசனங்களை மாற்றி இணையத்தில் வெளியிட்டுள்ளனர் சிலர்.


சிவாஜி: கொரோனா பற்றிய சந்தேகத்தை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
நாகேஷ்: நானே கேட்கிறேன், நானே கேட்கிறேன்.

நா: கொரோனா எதன் வழியாக தாக்குகிறது?
சி: கண், மூக்கு, காது வழியாக தாக்கும் நோய்.

நா: பக்கத்தில் யாரும் தும்மினால்?
சி: இரண்டு மீட்டர் தள்ளி ஓடு இல்லை பேஸ் மாஸ்க் போடு

நா: Symptoms?
சி: இருமல், காய்ச்சல், மூச்சு கோளாறு

நா: பரவ வாய்ப்பிருக்கும் பொருட்கள்?
சி: கை, கைப்பிடி, பேனா, mouse, keyboard, lift பட்டன், போன் போன்ற பல.

நா: தடுக்க வழி?
சி: கண், மூக்கு, காதுகளை தொடும் கையையே அடிக்கடி கழுவவேண்டும்.

நா: மீறி உடல்நிலை சரியில்லாமல் போனால்..
சி: உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ சிவாஜி கணேசன் இறந்து 19 வருடங்கள் கழித்து தற்போது வைரலாகி உள்ளது பற்றி பலர் நெகிழ்ச்சியாக இணையத்தில் பேசி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்