ஆப்நகரம்

2.0 Box Office Collection: பாலிவுட்டை அதிர வைக்கும் 2.0 கலெக்ஷன்!

2.0 திரைப்படத்தின் வசூல் பாலிவுட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 10 நாட்களில் அந்தப் படம் 150 கோடியை ரூபாயைத் தாண்டியுள்ளது.

Samayam Tamil 10 Dec 2018, 1:00 pm
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயங்கிய பிரம்மாண்ட திரைப்படமான 2.0 வசூலில் சாதனைகள் புரிந்துவருகிறது. சில நாட்களுக்கு முன் ரூ.500 கோடி மைல்கல்லை எட்டியது.
Samayam Tamil rajinikanth-2-0-7593


இந்தி டப்பிங் செய்யப்பட்ட இந்தப் படத்திற்கு 150 கோடிக்கு மேல் வசூல் கிடைத்துள்ளது. பத்து நாட்களிலேயே ரூ. 154.75 கோடி ரூபாயை இந்தியில் வசூலித்துவிட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் 56.41% வசூல் சூடுபிடித்துள்து என திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். மேலும், வெள்ளிக்கிழமை 5.89 கோடியும் சனிக்கிழமை 9.15 கோடியும் வசூலானது எனவும் இதனால் மொத்தம் 154.75 கோடியை இந்தியில் மட்டுமே பெற்றுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

சாரா அலி கான் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள கேதார்நாத் திரைப்படம் மட்டும்தான் 2.0 படத்துக்கு தற்போது ஒரே போட்டியாக இருக்கிறது. இந்தப் படத்தை அபிஷேக் கபூர் இயக்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்