ஆப்நகரம்

தெலுங்கில் அதிக விலைக்கு போன ‘2.0’!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படம் தெலுங்கு விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.

TNN 11 Aug 2017, 4:59 pm
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படம் தெலுங்கு விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது.
Samayam Tamil 2 0 going over cost to telugu version
தெலுங்கில் அதிக விலைக்கு போன ‘2.0’!


‘2.0’ படம் ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமை விற்பனையில் சாதனை படைத்திருப்பதாக லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தெரிவித்துள்ளார். ‘2.0’ படத்தின் இறுதி பாடல் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், ஜனவரி வெளியீடு என்பதால் படத்தின் உரிமை விற்பனையில் தீவிரம் காட்டி வருகிறது தயாரிப்பு நிர்வாகம்

தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமை விற்பனை குறித்து லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம், “’2.0’ - ஆந்திரா மற்றும் தெலங்கானா உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுவிட்டன. லைகா நிறுவனம் மற்றும் க்ளோபல் சினிமாவின் கூட்டு, வரலாறு படைக்கவுள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘2.0’. இந்தப் படத்துககு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.400 கோடி என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்