ஆப்நகரம்

2.0 படத்தை குறிவைக்கும் வாட்டாள் நாகராஜ்- வெடித்தது புதிய சர்ச்சை

கர்நாடகாவில் 2.0 திரைப்படம் வெளியானால் போராட்டம் நடத்தப்படும் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Nov 2018, 1:09 pm
ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம், கர்நாடகாவில் வெளியானால், அனைத்து திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
Samayam Tamil 2.0 protest
ரஜினியின் ’2.0’-க்கு குறி: போராட்டம் அறிவித்தா வாட்டாள் நாகராஜ்


ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. இந்த படம் வரும் 29ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் குறிப்பாக பெங்களூருவில் பிற மொழி படங்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதாகவும், தமிழ், இந்தி மொழி படங்கள், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாவதாகவும், இதனால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், 'ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் 29-ந் தேதி வெளிவருகிறது. இதற்காகக் கர்நாடகத்தில் அனைத்துத் திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம்'என்று கூறியுள்ளார்.

முன்னதாக காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்