ஆப்நகரம்

2Yearsof96 ராம், ஜானுவை உங்களால் மறக்க முடியுமா?

96 படம் ரிலீஸாகி இரண்டு ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 4 Oct 2020, 12:14 pm
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படம் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. முன்னதாக விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் படத்தின் தலைப்பு 96 என்று அறிவித்தபோது இது என்ன தலைப்பு, படம் எப்படி இருக்கப் போகிறதோ என்று பலரும் தெரிவித்தார்கள். ஆனால் படத்தை பார்த்த அனைவரும் அசந்து தான் போனார்கள்.
Samayam Tamil 96


அதிலும் குறிப்பாக இந்த 90ஸ் கிட்ஸ் 96 படத்தை திரும்பத் திரும்ப பார்த்து ஃபீல் பண்ணினார்கள். காதல் ஜோடிகள் அனைவரும் ராம், ஜானுவை கொண்டாடினார்கள்.

பல ஆண்டுகள் கழித்து நடந்த சந்திப்பின்போது ராமும், ஜானுவும் டீசென்டாக நடந்து கொண்டது தான் ரசிகர்களை நெகிழ வைத்தது. இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை, குத்தாட்டம் இல்லை, கவர்ச்சி உடை இல்லை, முத்தக் காட்சி இல்லை ஆனாலும் 96 படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். நல்ல கதை இருந்தால் போதும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கு 96 ஒரு சிறந்த உதாரணம்.

ஜானுவை நினைத்து ராம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததை பார்த்து இப்படி ஒரு ஆள் நமக்கு கணவராக கிடைக்க மாட்டாரா என்று ஏங்கிய பெண்கள் பலர். இப்படி பலரையும் பல விதத்தில் ஏங்க வைத்து, சிரிக்க வைத்து, அழ வைத்து, ஒரு சொல்ல முடியாத உணர்வை கொடுத்த 96 படம் ரிலீஸாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் 96 படம் குறித்து ரசிகர்கள் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். #2Yearsof96 #2YearsofClassic96 #2YearsofRamJaanu ஆகிய ஹேஷ்டேகுகளுடன் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.

96 படம் குறித்து ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்று இருக்கிறது. இந்த படத்திற்கு ஹேட்டர்களே இல்லை எனலாம். த்ரிஷாவின் நடிப்பு அருமை. அது நடிப்பு அல்ல ஜானுவாகவே வாழ்ந்திருக்கிறார்.
ராம், ஜானுவை பார்த்தபோது பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட காதல் எல்லாம் கண் முன்பு வந்து சென்றது. நான் காதலித்த பெண் எங்கிருக்கிறாளோ என்று ஏங்க வைத்த படம். காதலை இப்படியும் சொல்லலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ப்ளூ சட்டை மாறனின் பெருமூளை மழுங்கி மட்டையாகிப் போனது: இயக்குநர் பொளேர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்