ஆப்நகரம்

'மிக மிக அவசரம்’ படத்தைப் பார்த்த 200 பெண் போலீசார்!

காவலர் தினத்தை முன்னிட்டு, சுமார் 200 பெண் போலீசார் 'மிக மிக அவசரம்' படத்தைப் பார்த்துள்ளனர்.

Samayam Tamil 25 Oct 2018, 7:54 pm
பெண் போலீசார் 200 பேர் ‘மிக மிக அவசரம்’ படத்தை காவலர் தினத்தன்று பார்த்துள்ளனர்.
Samayam Tamil 201708081701376275_10_38331_L_galVPF


பெண் போலீசாரை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ‘மிக மிக அவசரம்’. இந்தப் படத்தை ‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் இயக்குனர் சீமான், ஈ.ராமதாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். போலீஸ் பணியிலுள்ள பெண் போலீஸாரின் துயரங்களை சொல்லும் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைகடந்த காவலர் தினம் அன்று 200 பெண் போலீசார் பார்த்தனர்.

இதுகுறித்து சுரேஷ் காமாட்சி கூறும்போது, ‘‘பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படம் அல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை படம் சொல்கிறது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்