ஆப்நகரம்

2.0 Release in USA: அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் ‘2.0’

ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘2.0’ திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 305 திரையரங்குகளில் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 22 Nov 2018, 12:35 pm
ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ‘2.0’ திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 305 திரையரங்குகளில் வெளியாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் ‘2.0’
அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களுக்குப் போட்டியாக களமிறங்கும் ‘2.0’


இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எந்திரன்’. மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவதுமாக முடிந்து, திரைப்படமானது வரும் நவம்பர் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ளது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரமிக்க வைத்தது.

இந்நிலையில், இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 305 சென்டர்களில் இப்படம் வெளியாவதாகவும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளை சேர்த்தால் 1000க்கும் மேற்பட்ட திரைகளில் இந்தப் படம் திரையிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இது இந்திய சினிமாத் துறையினர் பிரமிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்