ஆப்நகரம்

நயன்தாரா நடித்த 3 படங்கள் 2 மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகின்றன!

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் 3 படங்கள் 2 மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

TNN 1 Nov 2017, 2:51 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் 3 படங்கள் 2 மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
Samayam Tamil 3 movies of nayanthara are releasing in 2 months
நயன்தாரா நடித்த 3 படங்கள் 2 மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகின்றன!


இயக்குனர் கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள படம் ‘அறம்’. இந்தப் படம் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதையடுத்து நயன்தாரா, ‘டிமான்டி காலனி’ படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். படத்தில் நடிகர் அதர்வா , நட¬கை- ராஷி கண்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம், டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது.

இதையடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ என்ற படத்தில் நடிகை நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

ஆக, நயன்தாரா நடிப்பில் உருவான மூன்று படங்கள் 2 மாதங்களில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்