ஆப்நகரம்

விக்ரம் பிரபு - சமுத்திரக்கனி - பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘60 வயது மாநிறம்’!

‘60 வயது மாநிறம்’ என்ற புதிய படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

Samayam Tamil 1 Aug 2018, 5:19 pm
‘60 வயது மாநிறம்’ என்ற புதிய படத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
Samayam Tamil விக்ரம் பிரபு - சமுத்திரக்கனி - பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகும் ‘60 வயது மாநிறம்’!


தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. தற்போது இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார். அந்தப் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ‘60 வயது மாநிறம்‘ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விக்ரம்பிரபு மற்றும் சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் இந்துஜா, குமரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரேட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை ராதாமோகன் இயக்கவுள்ளார். இந்தப் படம் ஒரு கன்னட படத்தின் ரீமேக்காகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்