ஆப்நகரம்

பாகுபலி2 பட டிக்கெட் விலை 3 மடங்கு உயர்வு

மக்களின் ஆர்வத்தை சாதகமாக்கி பாகுபலி 2ம் பாகம் திரைப்படத்திற்கான டிக்கெட் 3 மடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது.

TNN 26 Apr 2017, 6:24 pm
பெங்களூரு : மக்களின் ஆர்வத்தை சாதகமாக்கி பாகுபலி 2ம் பாகம் திரைப்படத்திற்கான டிக்கெட் 3 மடங்கு உயர்த்தி விற்கப்படுகிறது.
Samayam Tamil 4 am show rs 600 a ticket bahubali 2 mania to grip bengaluru this friday
பாகுபலி2 பட டிக்கெட் விலை 3 மடங்கு உயர்வு


கன்னடர்களை தவறாக பேசியதாக கூறி சத்யராஜும் நடித்துள்ள பாகுபலி2-ம் பாகம் கர்நாடகாவில் வெளியிடவிட மாட்டோம் என கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் சத்யராஜ் வெளியிட்ட வீடியோ மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது.

தற்போது பாகுபலி2 படத்தை வெளியிட ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெங்களூருவில் ஒரு ஸ்கிரீன் மட்டும் கொண்ட 30 தியேட்டர்கள் உள்பட்ட பல தியேட்டர்களில் இந்த படம் வெளியிடப்படுகின்றன.

இந்நிலையில் பொதுவாக திரைப்படத்திற்கு ரூ. 100 மற்றும் ரூ.200 இருக்கும் டிக்கெட் தற்போது எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் பால்கனி டிக்கெட் ரூ.600, பின் வரிசைக்கு ரூ. 500, கடைசி வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ. 400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 4மணிக்கு முதல் காட்சி போடப்படும் என அறிவிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்