ஆப்நகரம்

‘மெர்சல்’ படத்திலிலிருந்து நான்கு காட்சிகள் நீக்கம்?

வலுத்துவரும் எதிர்ப்பால் ‘மெர்சல்’ படத்தில் நான்கு காட்சிகள் நீக்கப்படவுள்ளன.

TNN 21 Oct 2017, 3:29 pm
வலுத்துவரும் எதிர்ப்பால் ‘மெர்சல்’ படத்தில் நான்கு காட்சிகள் நீக்கப்படவுள்ளன.
Samayam Tamil 4 scenes removed from mersal
‘மெர்சல்’ படத்திலிலிருந்து நான்கு காட்சிகள் நீக்கம்?


பாஜகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான மெர்சல் படத்திலிருந்து நான்க காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ‘மெர்சல்’ படத்தில் நடிகர் விஜய் ஜி.எஸ்.டி பற்றி பேசிய சில வசனங்கள் பாஜகவினரை கொதிப்படைய செய்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா போன்றோர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்த வசனங்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக படத்தின் தயாரிப்புக் குழு நேற்று அறிவித்தது. இந்நிலையில், படத்தில் மொத்தம் நான்கு காட்சிகளை நீக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நான்கு காட்சிகளை நீக்கக் கோரி தணிக்கை வாரியத்திடம் 23 அல்லது 24 தேதி படகுழு கடிதம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்