ஆப்நகரம்

5 கதாநாயகிகள் நடிக்கும் ‘சோலோ’ படத்தில் துல்கர்!

நடிகர் துல்கர் சல்மான் ‘சோலோ’ படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

TNN 29 May 2017, 5:36 pm
நடிகர் துல்கர் சல்மான் ‘சோலோ’ படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil 5 heroine singel hero dulquar salman in solo
5 கதாநாயகிகள் நடிக்கும் ‘சோலோ’ படத்தில் துல்கர்!


கடந்த சில நாட்களுக்கு முன் நீளமான முடியை கொண்டையாக போட்டபடி இருந்த துல்கர் சல்மானின் புதிய லுக் சோஷியல் மீடியாவில் வைரலாகி பரவியது.. இப்போது லேட்டஸ்ட்டாக அந்த லுக்கிற்கு முற்றிலும் மாறாக ஒட்ட வெட்டிய முடியுடன் ஆர்மி லுக்கில் துல்கர் சல்மான் காட்சியளிக்கும் புதிய லுக் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது..

இந்தப் படத்தில் இந்த இரண்டு கெட்டப்புக்களில் துல்கர் சல்மான் ‘சோலோ’ படத்திற்காக தற்போது நடித்துவருகிறார். அதுமட்டுமல்ல, இன்னொரு கெட்டப்பும் இந்தப்படத்தில் இருக்கிறதாம். விக்ரம், ஜீவா இருவரையும் இணைத்து தமிழில் ‘டேவிட்’ என்கிற படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். டேவிட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நாசரும் இந்தப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்