ஆப்நகரம்

சென்சார் போர்டு அதிகாரிகள் திடீர் மாற்றம் ஏன்?

சென்சார் போர்டு அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

TNN 22 Dec 2017, 3:03 pm
சென்சார் போர்டு அதிகாரிகள் 7 பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
Samayam Tamil 7 censor board officials were suddenly changed
சென்சார் போர்டு அதிகாரிகள் திடீர் மாற்றம் ஏன்?


சென்சார் போர்டு மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்தன. படங்களுக்கு சான்றிதழ் தருவதில் இழுத்தடிப்பு, கலாசாரம் என்கிற பெயரில் படங்களில் காட்டப்படும் காட்சிகளை வெட்டுவது, படத்தை தணிக்கை செய்யவே லஞ்சம் கேட்பது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்சார் போர்டு தலைவர் பஹ்லஜ் நிஹலானி நீக்கப்பட்டு, இந்தி சினிமா பாடலாசிரியர் பர்சுன் ஜோஷி நியமிக்கப்பட்டார்.

இதுபோலவே பல மாநிலங்களின் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.அதன்படி நேற்று இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை தணிக்கை அதிகாரியாக இருந்து வந்த மதியழகன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லீலா மீனாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். வர் டெல்லி தூர்தர்ஷனில் பப்ளிக் டிவிஷனல் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர். இதேபோல சாம்ராட் பண்டோபாத்யாய கொல்கத்தா அதிகாரியாகவும், குருபிரசாத் பெங்களூர் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


கர்மார்கர் துஷ்சார் மும்பை அதிகாரியாகவும், வி.பார்வதி திருவனந்தபுரம் அதிகாரியாகவும், சுபஸ்ரீ மஹாபத்ரா சட்டாக் அதிகாரியாகவும், ரகுல் கோவில்கர் ஐதராபாத் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரே நேரத்தில் பல இடங்களை சேர்ந்த 7 அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்