ஆப்நகரம்

ரஜினி பிறந்தநாள் CDP வெளியிட்ட 70 பிரபலங்கள்: அமர்க்களப்படுத்தும் ரசிகர்கள்

ரஜினியின் பிறந்தநாளையொட்டி 70 பிரபலங்கள் அவரின் சிடிபியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 11 Dec 2020, 6:27 pm
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை தன் 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷலானதாகும். அரசியல் கட்சியை துவங்கப் போவதாக அறிவித்த கையோடு பிறந்தநாள் வருவதால் அதை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர் ரசிகர்கள்.
Samayam Tamil rajinikanth


நலத்திட்ட உதவிகள் செய்வது, அன்னதானம் செய்வது, கேக் வெட்டுவது, போஸ்டர் ஒட்டுவது என்று பெரிய திட்டம் வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். திரையுலக பிரபலங்களின் பிறந்தநாள் என்றால் ட்விட்டரில் CDP வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ரஜினி தன் 70வது பிறந்தநாளை கொண்டாடுவதால் அவரின் சிடிபியை 70 பிரபலங்களை வெளியிட வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ரஜினி ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரஹ்மான், ராகவா லாரன்ஸ், கீர்த்தி சுரேஷ், சந்தோஷ் நாராயணன், ஆஷ்னா ஜவேரி, ஐஸ்வர்யா மேனன், லிங்குசாமி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, அபர்ணா பாலமுரளி, உள்ளிட்ட 70 பிரபலங்கள் சிடிபியை வெளியிட்டுள்ளனர்.

ரஜினியின் பிறந்தநாளையொட்டி அண்ணாத்த படத்தின் அப்டேட் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். மெகா அறிவிப்பு வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று ட்வீட் செய்தபோது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் வெளியாகப் போகிறது என்று ரஜினி ரசிகர்கள் நினைத்தார்கள். இதையடுத்து #Annaatthe என்கிற ஹேஷ்டேகை ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் செய்தார்கள். ஆனால் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார் என்று அறிவித்தது சன் பிக்சர்ஸ்.

அண்ணாத்த படம் குறித்து அப்டேட் கொடுக்கும் ஐடியாவே இல்லையா என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் வரும் 15ம் தேதி மீண்டும் துவங்கவிருக்கிறது. ரஜினி வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

ரஜினி தெரிஞ்சு செய்றாரா, இல்லை தெரியாம செய்றாரா?

கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்