ஆப்நகரம்

Mohini: மத போதகராக மாறிய 90ஸ் கனவுக்கன்னி: நடிகை மோகினியின் தற்போதைய நிலை.!

சினிமாவில் இருந்து ஒதுங்கிய நடிகை மோகினி தற்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார்.

Samayam Tamil 17 Aug 2022, 7:55 am
தமிழ், மலையாளம், மற்றும் சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளவர் நடிகை மோகினி. 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் பிரபலமான நடிகைகள் மத்தியில் இவரும் ஒருவர். இவர் தற்போது கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார்.
Samayam Tamil மோகினி
மோகினி


ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோகினி. 90களின் காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக வலம் வந்தார். இவருக்கு நீல நிற கண் என்பதால் பூனை கண்ணழகி எனவும் அழைக்கப்பட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார் மோகினி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இவர் நடிப்பில் தமிழில் வெளியான புதிய மன்னர்கள், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த மோகினி, சன் தொலைக்காட்சியில் காதல் பகடை, ராஜராஜேஸ்வரி , ஒரு பெண்ணின் கதை போன்ற சீரியல்களில் நடித்தார்.

Amala Paul: ஆடைகளை களைந்து நடிப்பதில் என்ன தவறு.?: நடிகை அமலா பால் ஓபன் டாக்.!

மோகினி பரத் என்பவரை மணந்துகொண்டு, அமெரிக்காவில் குடியேறினார். இந்நிலையில் இவர் தற்போது அமெரிக்காவில் கிறிஸ்துவ மத போதகராக மாறியுள்ளார். இந்த தகவலை பேட்டியின் மூலம் மோகினி உறுதி செய்துள்ளார். மேலும் இவர் கணவருடன் விவாகரத்து வாங்கி விட்டார். மோகினிக்கு ருத்ரகேஷ் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்