ஆப்நகரம்

வைரலாகும் பாபி சிம்ஹாவின் குடும்பப் படம்!

பாபி சிம்ஹா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தை முத்ரா உடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

TOI Contributor 28 Sep 2017, 12:22 pm
பாபி சிம்ஹா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தை முத்ரா உடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil a beautiful family click of bobbysimha and reshmimenon
வைரலாகும் பாபி சிம்ஹாவின் குடும்பப் படம்!


காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு பீட்சா, நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், நேரம், ஜிகர்தண்டா, ஆடமா ஜெயிச்சோமடா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், உறுமீன் படத்தின் மூலம் நடிகை ரேஷ்மி மேனன் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் காதலித்த நிலையில், கடந்தாண்டு அவரை மணந்து கொண்டார். தற்போது அவர்களுக்கு முத்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. நாளை ஆயுத பூஜையை முன்னிட்டு குழந்தை மற்றும் மனைவி ரேஷ்மி உடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து இவர் நடித்துள்ள கருப்பன் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. A Beautiful family click of #BobbySimha @ReshmiMenonK !! pic.twitter.com/Q4CGiY9nvq — SS Music (@SSMusicTweet) September 28, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்