ஆப்நகரம்

வைரலாகும் அசுரன் தனுஷுன் செம்ம ‘க்யூட் கிஸ்’ போட்டோ!

சென்னை: நடிகர் தனுஷுக்கு பாப்பா முத்தம் கொடுக்கும் போட்டோ, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 27 Dec 2018, 9:47 am
சென்னை: நடிகர் தனுஷுக்கு பாப்பா முத்தம் கொடுக்கும் போட்டோ, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil asuran


பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 சமீபத்தில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ளார்.
இதில் கறை படிந்த பற்களுடன் தனுஷ் சிரிக்கும் போஸ்டர் வெளியானது. இதில் இருந்தே அவர் இப்படத்தில் வித்தியாசமாக நடிக்கப் போகிறார் என தெளிவாகத் தெரிகிறது. இத் இந்த படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கான கெட்டப்பில் உள்ள தனுஷூக்கு ஒரு பாப்பா கன்னத்தில் முத்தமிடும் போட்டோ, ரசிகர்களை கவர்ந்துள்ளது. ப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்