ஆப்நகரம்

‘பவர் பாண்டி’ படத்தை ‘பாகுபலி 2’ வுடன் ஒப்பிட்டு பேசிய விநியோகஸ்தர்!

‘பாகுபலி-2’ படத்துடன் ‘பவர் பாண்டி’ படத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார் பட விநியோகஸதர் ராஜராஜன்.

TNN 24 Mar 2017, 11:56 am
‘பாகுபலி-2’ படத்துடன் ‘பவர் பாண்டி’ படத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார் பட விநியோகஸதர் ராஜராஜன்.
Samayam Tamil a dealer speaking power pandi compare with baahubali 2
‘பவர் பாண்டி’ படத்தை ‘பாகுபலி 2’ வுடன் ஒப்பிட்டு பேசிய விநியோகஸ்தர்!


தனுஷ் இயக்குனராக அறிமுகமாகி இயக்கிய முதல் படம் ‘பவர் பாண்டி’ படத்தில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நேற்று ‘பவர்பாண்டி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ், ராஜ்கிரண் உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ‘பவர் பாண்டி’ படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்யும் ராஜராஜன் பேசும்போது, நான் தனுஷின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு தெரிந்த வரைக்கும் தனுஷை போல் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுப்பவர்கள் யாரும் இல்லை. ‘பாகுபலி 2’ படம் போல் இந்த படம் கண்டிப்பாக வெற்றிபெறும். அதை நான் உறுதியாக கூறுகிறேன் என்றார்.

மேலும் இவர் ‘பாகுபலி 2’ படத்தை தமிழ்நாட்டில் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்