ஆப்நகரம்

சிம்புவுடன் இணைய விரும்பும் ‘சர்கார்’ பட இயக்குனர்!

சென்னை: ‘சர்கார்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Samayam Tamil 7 Dec 2018, 6:25 pm
சினிமாவிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி தன்னுடைய வெற்றி தோல்வியை சமாளித்து முன்னுக்கு வந்தவர் நடிகர் சிம்பு. அப்படி வந்த சோதனைகளை எல்லாம் தைரியமாக கடந்து, இப்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகராக இருந்து வருகிறார்.
Samayam Tamil Simbu


அவருக்கு ஏகப்பட்ட படங்கள் வருகின்றன. வரும் பொங்கலுக்கு அவரின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக சிம்பு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

விஜய்யை வைத்து ‘சர்கார்’ என்ற வெற்றிப் படத்தை தந்த ஏ.ஆர். முருகதாஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘‘நடிகர் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க எனக்கு மிகவும் ஆசை. அது விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்