ஆப்நகரம்

அப்போ இந்தியன்? இப்போ தமிழனா? தமிழ் பாட்டு பாடுனா இந்தியன் இல்லையா?

லண்டனில், நேற்று, இன்று, நாளை நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான், தமிழில் பாடியதற்கு கிளம்பிய எதிர்ப்புக்கு பாடகி சின்மயி சரியான சரியான சவுக்கடி பதில் அளித்துள்ளார்.

TOI Sports 15 Jul 2017, 4:07 pm
லண்டன் : லண்டனில், நேற்று, இன்று, நாளை நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான், தமிழில் பாடியதற்கு கிளம்பிய எதிர்ப்புக்கு பாடகி சின்மயி சரியான சரியான சவுக்கடி பதில் அளித்துள்ளார்.
Samayam Tamil a r rahman gets trolled online after audience from his recent concert walkout
அப்போ இந்தியன்? இப்போ தமிழனா? தமிழ் பாட்டு பாடுனா இந்தியன் இல்லையா?



இங்கிலாந்தின் பிரபலமான வெம்பிளி ஸ்டேடியத்தில் லண்டன் வாழ் தமிழர்களுக்காக ‘நேற்று, இன்று, நாளை’ நிகழ்ச்சி நடந்தது. இதில் பெருமாலும் வட இந்தியர்களும் வந்திருந்தனர்.

நிகழ்ச்சி தொடங்கியது முதல் தமிழிலேயே பேசிய ரஹ்மான், தமிழ் பாடல்கள் அதிகமாக பாடப்பட்டது. இந்தி பாடல்களும் பாடப்படும் என ஆர்வத்தில் வந்திருந்த வட இந்தியர்கள் பலர் பாதியிலேயே வெளியேறினர்.

தாங்கள் டிக்கெட்டுக்காக செலுத்திய பணத்தை திரும்ப கேட்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பாடகி சின்மயி சரியான சவுக்கடி பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சின்மயி கூறுகையில்,’ இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்ற போது இந்தியனாக தெரிந்த ரஹ்மான் சார், 7 முதல் 8 தமிழ் பாடல்கள் பாடும் போது மட்டும் தமிழனா? இந்நிகழ்ச்சியில் 65 சதவீதம் ஹிந்தி பாடல்கள் இடம் பெற்றுள்ளது. சந்தேகம் என்றால் பட்டியலை பாருங்கள். இசைக்கு மொழிகளும் இல்லை. எல்லைகளும் இல்லை.’ என குறிப்பிட்டுள்ளார்.

Chinmayi wrote, “When Rahman sir wins 2 Oscars and creates history, he is “An Indian”, but 7-8 Tamil gaane kya gaa liye aap naraaz hote ho. What yaar? The show was called ‘Netru Indru Naalai’, had 65% Hindi songs (Set List is out there). Music knows no boundaries/language. Chase the American dream, your kids can Spanish; Live in the UK that once colonised India – but cry foul when a when you hear Tamil songs.”

அடுத்த செய்தி

டிரெண்டிங்