ஆப்நகரம்

சாந்தனுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

சாந்தனுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

TOI Contributor 5 Feb 2017, 7:13 am
உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் பிஸியாகவே இருப்பார். ஏனென்றால் தமிழ் தொடங்கி ஹாலிவுட் வரை பல படங்களுக்கு இசை அமைக்கிறார். அதுமட்டுமல்லாமல் திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியிலும் ஈடுபட்டுவருகிறார். எப்போதாவது தனது ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள முப்பரிமாணம் படத்தின் சிங்கள் டிராக் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த சிங்கள் டிராக்கை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.
Samayam Tamil a r rahman greets shanthanu
சாந்தனுவை வாழ்த்திய ஏ.ஆர்.ரஹ்மான்!


இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனவரி 30ஆம் தேதி வெளியான இந்தப்படத்தின் புரோமோ பாடலை பலரும் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பாடலை பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் குட்லக் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சாந்தனுவும் நன்றி சொல்லி ரீடுவீட் செய்துள்ளார்.


Good Luck#LetsGoParty from #Mupparimanam feat. @imKBRshanthnu #Music by @gvprakash https://t.co/JrJwU6kg4N @trendmusicsouth — A.R.Rahman (@arrahman) January 30, 2017

அடுத்த செய்தி

டிரெண்டிங்