ஆப்நகரம்

Amala Paul: மோடிக்கு ஆதரவு தந்த அமலா பால்: எதிர்ப்பு தெரிவித்த சித்தார்த்!!

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், நடிகை அமலா பால் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Aug 2019, 8:24 am
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. நாடெங்கிலும் இதனையொட்டி ஆதரவு கருத்துக்களும் எதிர்ப்பு குரல்களும் மாறி மாறி எழுந்து வருகின்றன. நாடெங்கிலும் பிரபலங்களும் தங்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். காஷ்மீரானது தனி நாடுஅதனை இவ்வாறு பிரிப்பது அர்த்தமற்ற செயல் உலகளவில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. ஆனால் மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதில் தீவிரமாக உள்ளது.
Samayam Tamil Actress Amala Paul


Thala Ajith: இதுவரை பார்த்திராத தல அஜித்: நேர்கொண்ட பார்வை படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்கள்!

தமிழ் நடிகை அமலா பால் மோடி அரசுக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில் "மத்திய அரசின் இந்த முடிவு, உண்மையிலே மிகவும்ஆரோக்கியமான ஒன்றாகும். இதுபோன்று துணிச்சல் மிக்கநடவடிக்கையை எடுப்பதற்கு மோடியால் மட்டுமே முடியும். நாடு சமாதானம் பெற வேண்டுகிறேன்''என தெரிவித்துள்ளார்.

Also Read: Ajith: சென்னை முழுவதும் 22 திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை!

நடிகர் சித்தார்த் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் கருத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.அதில் இந்த நாடு அழிவை நோக்கி பயணிக்கும் ஒரு தலைவரை தலைமையாக கொண்டுள்ளது. இதுவெல்லாம் திசை திருப்பும் வேலை தெரிந்தே இதச் செய்கிறார்கள். என்று பதிவு செய்துள்ளார்.

கோர்ட்டில் பின்னி பெடலெடுத்த தல: வேதனையை சாதனையாக்கும் நேர்கொண்ட பார்வை!

அடுத்த செய்தி

டிரெண்டிங்