ஆப்நகரம்

அமிர் கான், கிரண் ராவிற்கு பன்றிக் காய்ச்சல்; அதிர்ச்சியில் பாலிவுட் உலகம்...!

அமிர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவிற்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

TNN 7 Aug 2017, 10:15 am
மும்பை: அமிர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவிற்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil aamir khan and wife kiran rao down with swine flu
அமிர் கான், கிரண் ராவிற்கு பன்றிக் காய்ச்சல்; அதிர்ச்சியில் பாலிவுட் உலகம்...!


பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் அமிர் கான். அவருக்கும், மனைவி கிரண் ராவிற்கு எச்1என்1 பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர்கள் இருவரும் தங்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பானி தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க அமிர் கான் முடிவு செய்திருந்தார். ஆனால் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் பங்கேற்க முடியவில்லை.

இதையடுத்து மும்பை மக்களுக்கு வீடியோ கான்பரசிங் மூலம் உரையாற்றினார். அப்போது தானும் மனைவியும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக ஒருவாரம் வீட்டிலேயே இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பானி தன்னார்வ தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் அமிர் கானிற்கு பதில் ஷாருக்கான் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷாருக்கான், ஆமிர் மற்றும் கிரணிற்கு மிக்க நன்றி.

அவர்களை முதன்மைப்படுத்தும் இடத்தில் தான் இருப்பது பெருமை கொள்ளும் தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Aamir Khan and wife Kiran Rao down with swine flu, Shah Rukh Khan fills in for them at an event.

அடுத்த செய்தி

டிரெண்டிங்