ஆப்நகரம்

வீட்டில் இருந்தே புதுப்படங்களை பார்க்க நடிகர் கொடுத்த ஐடியா!

திரையரங்கு டிக்கெட் கட்டணம் உயர்வு, திருட்டு டிவிடி ஆகியவற்றை மனதில் கொண்டு வீட்டில் இருந்தே புதுப்படங்களை பார்க்க நடிகர் ஆரி ஐடியா கொடுத்துள்ளார்.

TOI Contributor 4 Jul 2017, 2:52 pm
திரையரங்கு டிக்கெட் கட்டணம் உயர்வு, திருட்டு டிவிடி ஆகியவற்றை மனதில் கொண்டு வீட்டில் இருந்தே புதுப்படங்களை பார்க்க நடிகர் ஆரி ஐடியா கொடுத்துள்ளார்.
Samayam Tamil actor aaris idea for watching movie from home
வீட்டில் இருந்தே புதுப்படங்களை பார்க்க நடிகர் கொடுத்த ஐடியா!


இன்றைய நிலையில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் இரண்டு நாட்களில் இன்டர்நெட்டில் வெளிவந்துவிடுகின்றன. இது போதாது என்று ஜிஎஸ்டி வரி கொண்டு வந்து திரையரங்குகளின் டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளனர். இதற்கு மாற்றாக நடிகர் ஆரி புது ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கென ஒரு அப்ளிகேஷன் தயார் செய்து கொண்டு, அதன் மூலம் எல்லா திரைப்படங்களையும் ரிலீஸ் செய்யலாம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள மொத்தம் 8 கோடி பேரில் 4 கோடி பேர் சினிமா பார்ப்பவர்கள். மாதம் 100 ரூபாய் கட்டணம் செலுத்தினால் படம் பார்க்க முடியும் என்று அறிவித்தால் அதிக லாபம் கிடைக்கும். அதனை தயாரிப்பாளரும் மற்றுவர்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இந்த ஐடியா எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியிவில்லை என்றாலும் திருட்டு டிவிடி மற்றும் டிக்கெட் கட்டண உயர்வை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நெடுஞ்சாலை, மாயா போன்ற படங்களில் நடித்துள்ள ஆரி ஜல்லிக்கட்டு போராட்டம் வாயிலாக தமிழக மக்களிடம் நன்கு அறியப்பட்டவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்