ஆப்நகரம்

ஆளில்லா விமானத்தை இயக்கும் சோதனை வெற்றி: அஜித் குழு சாதனை!

நடிகர் அஜித் ஆளில்லா விமானத்தை இயக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 13 Nov 2018, 11:34 am
எம்.ஐ.டி கல்லூரி மாணவர்களுடன், நடிகர் அஜித் ஆளில்லா விமானத்தை இயக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil aji 2
ஆளில்லா விமானத்தை இயக்கும் சோதனை வெற்றி: அஜித் குழு சாதனை!


அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள், ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய ’தக்‌ஷா’ என்னும் குழுவை உருவாக்கினர். இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அஜித் பயிற்சியளித்த தக்‌ஷா குழுவினர், அதிக நேரம் வானில் பறக்கக்கூடிய ஆளில்லா விமானத்திற்கான போட்டியில் கல்லூரி அளவில் முதல் இடத்தைப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த UAE மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலன்ஞ் போட்டியிலும் ‘தக்‌ஷா குழு’ இரண்டாம் இடத்தை வெற்றி பெற்றது. இந்நிகழ்வின் போது நடிகர் அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

ஆளில்லா விமானத்தை இயக்கும் சோதனை வெற்றி: அஜித் குழு சாதனை!


இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பை முடித்திருக்கும் அஜித், தக்‌ஷா குழுவின் அடுத்த ட்ரோன் திட்டத்துக்காக எம்.ஐ.டி கல்லூரிக்கு வந்துள்ளார். இந்த பயிற்சியில் மாணவர்களுடன் அஜித் இருக்கும் புகைப்படங்களும், அவர் ஆளில்லா விமானத்தை இயக்கும் வீடியோக்களும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆளில்லா விமானத்தை இயக்கும் சோதனை வெற்றி: அஜித் குழு சாதனை!


இந்தியாவில் முதல் முறையாக 1 நபரை சுமந்து செல்லும் ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) சோதனை செய்வதற்காக நடிகர் அஜித் வந்திருந்ததாகவும், இந்தச் சோதனை வெற்றி பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்