ஆப்நகரம்

அஜித் பெயரை சொல்லி 20 பேரிடம் வேலை வாங்கிய காமெடி நடிகர் மயில்சாமி!

பிரபல காமெடி நடிகர், நான் அஜித் பெயரைச் சொல்லி 20 இளைஞர்களிடம் வேலை வாங்கினேன் என்று பெருமையாக கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Feb 2019, 1:37 pm
தமிழ் சினிமாவில் 30 வருடங்களுக்குமேல் நடித்து வருபவர் காமெடி நடிகர் மயில்சாமி. இவர் பல கிராமத்து படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்து வருகிறார். மேலும் இவர் பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
Samayam Tamil mayilsamy


படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வெள்ளம் சூழ்ந்தது குறித்து சுவார்ஸ்மான தகவலை ‘எல்கேஜி’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.

‘‘சென்னை வெள்ளத்தின் போது நாங்கள் பல உதவிகளை செய்து வந்தோம், அப்போது ஒரு சில இளைஞர்களின் உதவியும் தேவப்பட்டது. அதில் 20 இளைஞர்கள் அஜித் சாரிடம் போட்டோ எடுக்க அனுமதி வாங்கி தருகின்றேன் என சொன்னவுடன், நேரம் காலம் பார்க்காமல் அப்படி வேலைப்பார்த்தார்கள்’’ என்றார் மயில்சாமி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்