ஆப்நகரம்

தல 57 படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த அஜீத்! அதிர்ச்சி அடைந்த படக்குழு!!

தல 57 படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த அஜீத்! அதிர்ச்சி அடைந்த படக்குழு!!

TOI Contributor 10 Jan 2017, 4:38 am
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே அஜீத் நடிக்கும் தல 57 படம் தயாராகிவருகிறது. இந்தப்படத்தை சிவா இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத்தை வைத்து வீரம் மற்றும் வேதாளம் படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய ஹிட் என்பதால் இந்த படத்திற்கு அதற்கும் மேலாக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
Samayam Tamil actor ajith took big risk for thala 57 movie
தல 57 படத்திற்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்த அஜீத்! அதிர்ச்சி அடைந்த படக்குழு!!


இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இணையத்தில் வெளியான அஜீத்தின் புகைப்படமே பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றிற்காக 29 அடி உயரத்தில் இருந்து டூப் ஏதும் போடாமல் அஜீத் நடித்துள்ளார். இயக்குநர் எவ்வளவு சொல்லியும் கேட்காத அஜீத் டூப் வேண்டாம் என்று சொல்லி தான் நான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இத்தனை ரிஸ்க் எடுத்து நடித்துக்கொடுத்த அஜீத்தை படக்குழுவினர் எல்லோரும் வெகுவாக பாராட்டியிருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்