ஆப்நகரம்

தல 57 படப்பிடிப்பிற்காக வெளிநாடு புறப்பட்டார் அஜித்!

தல 57 படப்பிடிப்பிற்காக வெளிநாடு புறப்பட்டார் அஜித்!

TOI Contributor 14 Nov 2016, 1:49 pm
சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது தனது 57 படத்தில் நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படம் அஜித்தின் 57வது படம் என்பதால் தல 57 என்றும் ஏகே 57 என்றும் அழைக்கப்படுகிறது.
Samayam Tamil actor ajiths foreign trip for third schedule of his next film
தல 57 படப்பிடிப்பிற்காக வெளிநாடு புறப்பட்டார் அஜித்!


இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் அதுவும் முடிவடைந்துள்ளது.
இதற்கு முன்னர் அஜித்தை வைத்து சிவா இயக்கிய வீரம் மற்றும் வேதாளம் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இந்நிலையில் சிவாவுடனான மூன்றாவது படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது தல 57 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதால், அஜித் வெளிநாடு சென்றுள்ளார். விமான நிலையத்திற்கு வந்த அஜித்தை ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்