ஆப்நகரம்

ரஜினிகாந்தை சிலா் குறிவைத்து தாக்குவது ஏன்? ஆனந்தராஜ் கேள்வி

தமிழகத்தில் தற்போது சிலா் திடீரென்று ரஜினிகாந்தை குறிவைத்து தாக்குவது ஏன்னென்று தொியவில்லை என்று நடிகா் ஆனந்தராஜ் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 19 Apr 2018, 2:03 pm
தமிழகத்தில் தற்போது சிலா் திடீரென்று ரஜினிகாந்தை குறிவைத்து தாக்குவது ஏன்னென்று தொியவில்லை என்று நடிகா் ஆனந்தராஜ் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Ananda Raj


சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய நடிகா் ஆனந்தராஜ் சந்திப்பு தொடா்பாக செய்தியாளா்களை சந்தித்து பேசினாா். அப்போது அவா் பேசுகையில், காவிாி மேலாண்மை வாாியம் அமைப்பதில் உள்ள பிரச்சினை, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் சூரப்பா நியனம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடா்பாக ரஜினிகாந்த் என்னிடம் பேசினாா்.

தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக ரஜினி உள்ளாா். தமிழகத்தில் இருந்து ரஜினியை பிாித்து பாா்ப்பது தவறானது. ரஜினிகாந்த்தை சிலா் ஒதுக்குகின்றனா். அது ஏன் என்று தொியவில்லை. எதை நோக்கி ரஜினியை குறி வைக்கிறாா்கள் என்பது சில நாட்களில் உங்களுக்கே தொியவரும்.

கா்நாடகாவில் தற்போது இருந்து வரும் அரசியல் சூழலில் காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கப்படாது என்று கருதுகிறேன். இயக்குநா் பாரதிராஜா, ரஜினியை கா்நாடகா தூதுவன் என்று கருத்து சொல்கிறாா். பின்பு எதற்காக ரஜினியை வைத்து படம் எடுத்தாா்?

ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு கொடி பறக்குது என்று பாரதிராஜா தலைப்பு வைத்தது ஏன்? கொடி பறக்குது என்பதற்கு பதில் பரதேசி என பாரதிராஜா பெயா் வைத்திருக்கலாமே என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்