ஆப்நகரம்

வினோத் குருவாயூர் இயக்கத்தில் அப்பானி சரத்; தமிழர்கள் புகழ்பாடும் ஜல்லிக்கட்டு திரைப்படம்!

ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் தமிழ் திரைப்படத்தில் மலையாள நடிகர் அப்பானி சரத் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Samayam Tamil 4 Mar 2021, 10:31 am

ஹைலைட்ஸ்:

  • அப்பானி சரத் ஹீரோவாக நடிக்கும் தமிழ்ப் படம்
  • ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாக்கம்
  • வினோத் குருவாயூர் இயக்குநராக தமிழில் அறிமுகம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
மலையாளத்தில் ’அங்கமாலி டைரிஸ்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அப்பானி சரத். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் மூலம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மலையாள மொழியில் சிறந்த நெகடிவ் ரோலுக்கான விருதை அப்பானி சரத் வென்றார். இதையடுத்து ’வெளிப்படிண்டே புஸ்தகம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தார். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தின் மூலம் அப்பானி சரத் தமிழிலும் அறிமுகமானார்.
பின்னர் விஷால் நடிப்பில் வெளியான ‘சண்டக்கோழி 2’ படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையில் ஜீ தமிழின் ‘ஆட்டோ ஷங்கர்’ என்ற தமிழ் வெப் சீரிஸில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது பிக் பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் ஆரி நடிக்கும் புதிய படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

மனைவி குஷ்பு வழியில் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் சுந்தர் சி.?
இந்நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குநரும், கதாசிரியருமான வினோத் குருவாயூர் இயக்கத்தில் உருவாகி வரும் தமிழ் திரைப்படத்தில் அப்பானி சரத் ஹீரோவாக நடித்து வருகிறார். இது வினோத் குருவாயூர் அவர்களின் முதல் நேரடி தமிழ்ப் படமாகும். இந்தப் படம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் வினோத் குருவாயூர் கூறுகையில், தமிழர்களின் மண், மனிதம், கால்நடைகள் மீதான அன்பு, பாரம்பரியம், சடங்குகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெட் வேகத்தில் தயாராகும் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள்! ஜாலி மூடில் ரசிகர்கள்
அதுமட்டுமின்றி தற்கால சூழலில் மனிதர்களின் பலம், பலவீனம், அவர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்தும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை பழனியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் உள்ளிட்டவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்