ஆப்நகரம்

அருள்நிதி படத்தை இயக்கும் முன்னணி யூடியூப் பிரபலம்!

நடிகர் அருள்நிதி தனது அடுத்த படத்தில் யூடியூப் பிரபலம் ஒருவரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

Samayam Tamil 25 Feb 2020, 5:05 pm
நடிகர் அருள்நிதி நடிக்கும் அடுத்த படத்தை யூடியூப் மூலம் பிரபலமான எருமசாணி விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப்பில் எருமசாணி எனும் குழுவில் இயக்குநராகவும், நடிகராகவும் இருக்கிறார் விஜய்.
Samayam Tamil arulnithi


நடிகர் அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் கே13. சென்ற வருடம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார் அருள்நிதி. இந்த படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதனையடுத்து, அருள் நிதி நடிக்கும் படத்தை யூடியூப் எருமசாணி புகழ் விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநராக விஜய்யின் முதல் படம் இது. கல்லூரி வாழ்வில் நடைபெற்ற உண்மைக் கதை ஒன்றை அடிப்படியாகக் கொண்டு, இந்த படம் எடுக்கப்படவுள்ளது.

இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கவிருக்கிறார் அருள்நிதி. மாணவராக நடிப்பதால் அவர் 7 கிலோ அளவுக்கு எடையை குறைத்துள்ளார். இதுகுறித்து எருமசாணி விஜய் தெரிவித்துள்ளதாவது,

இந்த படம் கல்லூரியில் நடக்கும் உண்மை சம்பவத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை. முழு படமும் கல்லூரிக்குள் நடக்கிறது. இதில் மாணவனாக நடிப்பதால், 7 கிலோ வரை அருள்நிதி உடையை குறைத்துள்ளார். எங்களுக்கே அது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர் மிகவும் இளமையாக காட்சியளிக்கிறார். நானும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்