ஆப்நகரம்

‘தடம்’ படத்திற்காக பாரீஸ் சென்று பயிற்சி எடுத்த அருண் விஜய்!

அருண் விஜய் அடுத்து நடிக்கும் ‘தடம்’ படத்திற்காக பாரீஸ் சென்று பயிற்சியை முடித்து திரும்பியுள்ளார்.

TNN 28 Oct 2017, 4:35 pm
அருண் விஜய் அடுத்து நடிக்கும் ‘தடம்’ படத்திற்காக பாரீஸ் சென்று பயிற்சியை முடித்து திரும்பியுள்ளார்.
Samayam Tamil actor arun vijay get training for thadam movie
‘தடம்’ படத்திற்காக பாரீஸ் சென்று பயிற்சி எடுத்த அருண் விஜய்!


இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் ‘தடம்‘ படத்தில் நடிகர் அருண் விஜய்தற்போது நடித்து வருகிறார் .இது அவருக்கு 24வது படம். இந்தப் படத்தில் தன்யா, ஸ்ம்ருதி வெங்கட், வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

அருண் விஜய் தனது 25வது படம் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால், அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், ‘தடம்’ படத்திற்காக பாரீஸில் இரண்டு வாரங்கள் கடினப் பயிற்சி எடுத்துள்ளார். அருண் விஜய். இரண்டு வாரங்கள் பயிற்சி முடிந்த நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ளார். இந்தத் தகவலை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்