ஆப்நகரம்

HBD Arun Vijay: ஒரு சைடு முகத்தைக் காட்டிய அருண் விஜய்: சினம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 19 Nov 2019, 5:35 pm
முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அருண் விஜய் இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அருண் விஜய்க்கு டிரீட் கொடுக்கும் வகையில் சினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் போஸ்டரில், போலீஸ் கெட்டப்பில் இருப்பது போன்றும், அவரது ஒரு பக்கம் மட்டும் தெரிவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.
Samayam Tamil போலீஸ் கெட்டப்பில் அருண் விஜய்: சினம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது 42 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது.


நித்தி அகர்வாலின் அழகான புகைப்படங்கள்!

இந்தப் போஸ்டரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து அருண் விஜய் நடித்து வருகிறார். அதற்கு ஏற்றவாறு தனது உடலையும் ஃபிட்டாக கொண்டு வருகிறார். இப்படத்தை ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்குகிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வானி நடிக்க சபீர் இசையமைக்கிறார்.

அஜித்தால் இந்த நிலைக்கு வந்த அருண் விஜய்க்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்து!

இப்படத்தைத் தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ என்ற படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். அதில் பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் மாஃபியா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் 3 ரோலில் நடிக்கும் டிக்கிலோனா படத்தின் புகைப்படங்கள்!

View this post on Instagram ‪Here’s the #SINAM first look for you all! ‬ ‪Heartfelt thanks to Mani Sir for launching it..‬ ‪#SinamFirstLook @MSPLProductions @gnr_kumaravelan @gopinath_dop @ShabirMusic @silvastunt @DoneChannel1 ‬ A post shared by Arun Vijay (@arunvijayno1) on Nov 19, 2019 at 3:35am PST

அடுத்த செய்தி

டிரெண்டிங்