ஆப்நகரம்

பல பேரிடம் காதல் சொன்னேன்! சாயிஷாகிட்ட லவ்வே சொல்லல ! - ஆர்யா வாக்குமூலம் !!

நடிகர் ஆரியா நான் பெண்களிடம் நேரடியாக காதலைச் சொல்லி அது பலமுறை தவறாக போயுள்ளது. அதனால் சயிஷாவை காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லவில்லை எனக் கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Jul 2019, 12:11 pm
நடிகர் ஆர்யா "அறிந்தும் அறியாமலும்" படத்தின் மூலம் இயக்குனர் விஷ்ணு வர்தனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் . ஆர்யாவின் வெகுளியான பேச்சிற்கும் இயல்பான நல்ல குணத்திற்கும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி நண்பர்கள் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அதிலும் அவருக்கு பெண் நண்பர்கள் அதிகம்.
Samayam Tamil 1552211761-sys

பல வருடங்களாக இவரது கல்யாணப் பேச்சு, சர்ச்சையாகவே இருந்து கொண்டிருந்தது. அந்த சர்ச்சைக்கு இந்த வருடம் மார்ச் மாதம் மாதம் முற்றுப் புள்ளி வைத்து நடிகை சாயிஷாவை மணந்தார்.

சாயிஷா

தமிழில் "வணமகன்", "கடைக்குட்டி சிங்கம்", "ஜூங்கா" போன்ற படங்கில் நடித்தவர் சயிஷா. இவர் "கஜினிகாந்த்" என்ற படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அப்பொழுதுதான் ஆர்யா சயிஷா மீது காதல் வயப்பட்டார்.

சாயிஷா

நடிகைகள் மீது சரக்கு ஊற்றிய ராம் கோபால் வர்மா!!
கடந்த மார்ச் மாதத்தில் ஆர்யாவிற்கும் சயிஷாவிற்கும் திருமணம் நடந்தது. இந்த காதல் திருமணம் நடந்த சுவாரசியமான தகவலைப் பற்றி ஆர்யா, காப்பான் படத்தின் ஆடியோ வெளியீட்டின் பொழுது பேசினார்.
சூர்யாவின் காப்பான் பட ஷூட்டிங்கில் ஆர்யாவும் சயிஷாவும் ஒன்றாக இருக்கும்போது கூட படக்குழுவினருக்கு எதுவும் தெரியாதாம். அந்த அளவிற்கு அவர்களது காதலை ரகசியமாக பொத்தி பாதுகாத்து வந்துள்ளனர்.

சாயிஷா

பிகில் போஸ்டரும் காப்பி? போட்டுக் கிழிக்கும் இணையவாசிகள் !!
ஆர்யா காதல் ரகசியம் எப்படி பாதுகாக்கபட்டது என மேடையில் கூறினார். அவர் கூறியது "நான் என் காதலை முதலில் சயிஷாவிடம் தெரிவிக்கவில்லை. இதற்குமுன் நான் பெண்களிடம் நேரடியாக காதலைச் சொல்லி அது பலமுறை தவறாக போயுள்ளது. அதனால் சயிஷாவை காதலிக்கிறேன் என்று அவரிடம் சொல்லாமல் அவரது அவரது அம்மாவிடம் தான் சொன்னேன்" அதற்கு பிறகு தான் சாயிஷாவுக்கு தெரியும் என்று ஆர்யா நகைச்சுவையாக தெரிவித்தார். சாயிஷா ஆர்யா பேச்சை ரசித்துக்கேட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்