ஆப்நகரம்

நடிகர் ஆரியாவை திருமணம் செய்ய வேண்டுமா ? 73301-73301 எண்ணை தொடர்புகொள்ளுங்கள்

நடிகர் ஆரியா தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்கு தொலைபேசி எண்ணை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

TNN & Agencies 21 Nov 2017, 2:48 pm
நடிகர் ஆரியா தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்களுக்கு தொலைபேசி எண்ணை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil actor arya releases video about his marriage and contact number
நடிகர் ஆரியாவை திருமணம் செய்ய வேண்டுமா ? 73301-73301 எண்ணை தொடர்புகொள்ளுங்கள்


நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்ள பெண்ணை மும்மூராமாக தேடி வருகிறார். திரைதுறையில் சாக்கிலேட் பாய் என்றும் பிலே பாய் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆர்யா . இவரை ஜாமி என்றுதான் திரைதுறை பிரபலங்கள் அழைப்பார்கள்.

இவர் எல்லா ஹிரோயின்களையும் தன் டார்லிங் என்றுதான் அழைப்பார் என்று இவரை பற்றி நடிகர் நயன்தாரா தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருக்கிறார்.
Hi Friends 😊 Finally In search of my Life Partner 😍😍😍#MySoulmate ❤️❤️❤️ pic.twitter.com/zq88lIoglY — Arya (@arya_offl) November 21, 2017 நடிகர் சங்கம் கட்டம் கட்டியதற்கு பிறகுதான் விஷாலும் , ஆரியாவும் திருமணம் செய்துகொளவர் என்று கூறப்பட்டது. ஆனால் ஆரியா தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தான் கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதாக வீடியோ ஒன்றை பதிவுட்டுள்ளார்.

இதில் அவர் கூறியிப்பதாவது ‘நான் மிக தீவிரமாக திருமணம் செய்ய பெண்ணை தேடிக்கொண்டு இருக்கிறேன் . இதுதொடர்பாக ஏற்கனவே சென்ற வாரம் ஜிம்மில் பேசிக்கொண்டிருந்தேன் . அதை என் நண்பர்கள் விளையாட்டாக இணையத்தில் பதிவுறக்கம் செய்துவிட்டனர். ஆனால் இந்த வீடியோ விளையாட்டல்ல . என்னை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவோர் இந்த தொலைபேசி எண்களுக்கு அழைக்கவும் . இது எனது வாழ்க்கை சமந்தப்பட்ட விஷயம் விளையாட்டல்ல. என்றும் கூறியுள்ளார்.

நீங்கள் ஆரியாவை திருணம் செய்ய நினைத்தால் 73301-73301 இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .

அடுத்த செய்தி

டிரெண்டிங்