ஆப்நகரம்

Sayesha Saigal : ஆர்யா திருமணம் செய்துகொள்வது இவரைதான்!

கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த சாயீஷா சைகல், நடிகர் ஆர்யாவை விரைவில் திருணம் செய்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 8 Jan 2019, 4:08 pm
கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த சாயீஷா சைகல்,நடிகர் ஆர்யாவை விரைவில் திருணம் செய்து கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil 79020-cpjljzoxub-1515824276.


சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் இயக்கத்தில், கே.இ.ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் வெளியானத் தமிழ்த்திரைப்படம் கஜினிகாந்த். இத்திரைப்படத்தில் ஆர்யா, சாயிஷா சைகல் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பல்லுவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார்.

ஆர்யாவுக்கு விரைவில் கெட்டிமேளம்- இளம் நடிகையை கரம்பிடிக்கிறார்

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்தசாயிஷா சைகல்தற்போது ஆர்யாவை காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 21 வயதான சாயிஷா சைகல்37 வயதான ஆர்யாவை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகுவதாகவும், சாயிஷா சைகலின் வீட்டில் ஒருவராகவேஆர்யா மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.


சமீபத்தில் ஆர்யா வெளியாநாட்டில்படபிடிப்பில் இருந்தபோது சாயிஷா சைகல் வீட்டுக்கு அவர்சென்றிருந்ததாகவும், அங்கு அவரது தாய் ஆர்யாவை நன்றாக உபசரித்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் இருவருக்கும் நெருக்கம் இன்னும் அதிகரித்ததாக கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் கூடியவிரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

சென்ற ஆண்டுநடிகர் ஆர்யாஎங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆர்யா மனதை வெல்லும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரை திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. ஆனால்ஆர்யா தான்யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்