ஆப்நகரம்

சாக்லேட் பாயா இப்படி ஆகிட்டாரு? வியப்பில் ரசிகர்கள்!

எப்படி இருந்த சாக்லேட் பாய் இப்படி ஆகிட்டாரே என்று வியந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Samayam Tamil 20 Feb 2020, 7:59 am
இதோ இந்த புகைப்படத்தில் திரும்பி நிற்கிறாரே அவர் வேறு யாருமில்லை நடிகர் ஆர்யாதான். ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுமஸ்தாக மாற்றி வைத்துள்ளார். நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றோடு வருகிறாராம்.
Samayam Tamil aarya


கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. அந்த படத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சாயிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதன் பிறகு இரண்டு முக்கிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் ஆர்யா.

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் போன்ற வித்தியாசனமான படங்களை இயக்கியுள்ள சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ஆர்யா. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். கே இ ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்.

ஆர்யா நடிக்கும் மற்றொரு படத்தை இயக்குகிறார் பா ரஞ்சித். பாக்ஸிங் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறது இந்த படம். இந்த படத்தில் ஆர்யாவுடன், அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்டோரும் நடிக்கின்றார்கள்.

உடற்பயிற்சியில் மிக ஆர்வமாக இருக்கும் ஆர்யா, தனது உடலை மிகவும் கட்டுமஸ்தாக மாற்றி புகைப்படமெடுத்து தனது சமூக வலைதள கணக்கில் இட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பார்த்து வியந்து வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்