ஆப்நகரம்

Asura Guru: ஓபிஎஸ், ஸ்டாலினை தாக்கிப் பேசிய பாக்கியராஜ்; “அசுரகுரு” பிரஸ் மீட்டில் சலசலப்பு!

”அசுர குரு” படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில், நடிகர் பாக்கியராஜ் பேசிய கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Jul 2019, 7:55 pm
விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க, புதுமுக இயக்குநர் ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ”அசுர குரு”. ரயிலில் பணம் கொள்ளை போன உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஒரு திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. மஹிமா நம்பியார் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கிறார். ஜெகன், யோகிபாபு முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
Samayam Tamil Asura Guru


பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் கலைப்புலி தாணு, பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய பாக்கியராஜ், தமிழக அரசியல்வாதிகள் பற்றியும், அவர்கள் வாரிசு அரசியல் பற்றியும் பேசினார். இந்தப் படம் நல்ல எதிர்பார்ப்பை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விக்ரம் பிரபு இப்படத்தில் தனித்து தெரிகிறார்.

அவர் நல்ல கதைகள் தேர்ந்தெடுத்து போராடி சினிமாவில் வெற்றி பெற்றுள்ளார். உழைத்து சினிமாவில் தனக்கெனெ ஒரு இடத்தை பெற்றிருக்கிறார். சினிமாவில் தான் வாரிசுகள் ஜெயிப்பதற்கு திணறுகிறார்கள். என் மகன் சாந்தனு, பாண்டியராஜன் மகன் பிருத்வி ஆகியோர் சினிமாவில் ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் தான் வாரிசுகள் இவ்வாறு திணறிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாக்கள் நல்ல நிலையில் இருந்தாலும், சினிமாவில் மகன்களை வளர்த்து விட, ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஆனால் அரசியலில் ஒரு நாளில் ஓஹோவெனெ வளர்ந்து விடுகிறார்கள் என்றார். சமீபத்துல் ஓ.பி.எஸ்சின் மகன் எம்.பி ஆகியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதிக்கு திமுகவில் இளைஞரணி பதவி தரப்பட்டுள்ளது. இவை இரண்டுமே பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

வாரிசு அரசியலின் உச்சகட்டமாக பார்க்கப்படும் இந்த விசயத்தைத் தான், தன் பாணியில் பாக்கியராஜ் கிண்டலடித்தார். அவர் பேசியவுடன், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சிரிக்க, நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. என்னை வம்பில் மாட்டி விட்டு விடாதீர்கள் என்றார். ஆனால் எல்லோரும் அரசியல்வாதியை தாக்கிய பாக்கியராஜ் என்றுதானே தலைப்பு வைத்து எழுதுவீர்கள்.

நானே தலைப்பு கொடுத்துவிட்டேனே என நகைச்சுவையாக பேசினார். மேலும் ”அசுர குரு” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்